உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் துலாம்

 வார பலன் (23.1.2026 - 29.1.2026)துலாம்:சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.சித்திரை 3,4:சுக ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வேலைபளு கூடும். அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்யத்தில் பின்னடைவு ஏற்படும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. வருமானத்தில் நேரடி கண்காணிப்புத்தேவை. செவ்வாய்க்கிழமை அனைத்திலும் பொறுமை காப்பது நல்லது.சுவாதி: கேது சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். குடும்பம், தொழில், வேலையில் இருந்த போராட்ட நிலை மாறும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பெரியோரின் ஆதரவால் வேலை நடக்கும். புதன்கிழமை பொறுமையாக இருப்பது நல்லது.விசாகம் 1,2,3: வக்கிர குருவால் வளம் கூடும். நலம் உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தேவைக்கேற்ற வருமானம் வரும். புதன் வியாழனில் உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.சந்திராஷ்டமம்:27.1.2026 மதியம் 2:59 மணி - 29.1.2026 மாலை 5:18 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !