உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் துலாம்

வார பலன் (30.1.2026 - 5.2.2026)துலாம்: பிரத்தியங்கிராவை வழிபட நன்மை நடக்கும். சித்திரை 3,4: உங்கள் தன, குடும்ப, வாக்காதிபதி கேந்திர பலம் பெறுவதால் தைரியமாக செயல்படுவீர்கள். இழுபறியாக இருந்த வேலை முடியும். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றம் அடையும்.சுவாதி: ராகு குடும்பத்தில் சச்சரவு நெருக்கடி என்று ஏற்படுத்தினாலும் லாப கேதுவால் வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தேவைக்கேற்ற பணம் வரும். பிள்ளை நலனில் அக்கறை கூடும்.விசாகம் 1,2,3: வியாபாரம் லாபம் தரும். சேமிப்பு உயரும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !