வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)துலாம்:லட்சுமி நாராயணரை வழிபட நன்மைகள் நடக்கும். சித்திரை 3,4: உங்கள் ராசியாதிபதி சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு நிலை உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.சுவாதி: ஐந்தாமிட ராகு, சனியால் குடும்பத்தில் சச்சரவு நெருக்கடி என்று ஏற்பட்டாலும் லாப ஸ்தான கேதுவால் வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். அந்நியர் ஆதரவால் வேலை நடந்தேறும்.விசாகம் 1,2,3: பாக்ய ஸ்தானத்தில் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் பண விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழிலில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரியை அனுசரித்துச் செல்வது நல்லது. வம்பு, சண்டை விவகாரங்களில் விலகி இருப்பது அவசியம்.