வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன் (20.2.2026 - 26.2.2026)துலாம்: மகாலட்சுமியை வழிபட சங்கடம் விலகும்.சித்திரை 3,4: வேலைபளு கூடும். அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்யத்தில் பின்னடைவு ஏற்படும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. வருமானத்தில் நேரடி கண்காணிப்புத் தேவை. குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். செவ்வாய் அன்று அனைத்திலும் பொறுமை காப்பது நல்லது. சுவாதி: பணவரவு அதிகரிக்கும். குடும்பம், தொழில், வேலையில் ஏற்பட்ட போராட்டநிலை மாறும். குடும்ப சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும். செவ்வாய் புதன் அன்று பொறுமையாக செயல்படுவது நல்லது. விசாகம் 1,2,3: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தேவைக்கேற்ற வருமானம் வரும். கடன் தொல்லை நீங்கும். புதன் அன்று நிதானம் தேவை.சந்திராஷ்டமம்: 23.2.2026 இரவு 11:04 மணி - 26.2.2026 அதிகாலை 1:22 மணி