வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)துலாம்: விநாயகரை வழிபட நன்மைகள் நடக்கும். சித்திரை 3,4: தைரியமாக செயல்படுவீர்கள். மற்றவர்களால் முடிக்க முடியாத வேலைகளை முடித்து லாபமடைவீர் பொருளாதார நிலை உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்திர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர். நவீன பொருட்கள் சேரும்.சுவாதி: குடும்பத்தில் சச்சரவு நெருக்கடி என்று ஏற்பட்டாலும் அதை சமாளிப்பீர்கள். வியாபாரம் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். தேவைக்கேற்ற பணம் வரும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். சேமிப்பு உயரும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.