வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )துலாம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை நடக்கும். சித்திரை 3,4: செவ்வாய், சூரியன், ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைகளை ஒதுக்கிவிட்டு செயல்படுவர். பூர்வீக சொத்தில் புதுப்புது பிரச்னை தோன்றும்.சுவாதி: ஐந்தாமிடத்தில் சஞ்சரித்த சனிபகவான் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வழக்கு சாதகமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் அடையும்.விசாகம் 1,2,3: குரு வக்கிரம் அடைந்திருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வேலைப்பார்க்கும் இடத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது அவசியம். லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் வரவேண்டிய பணம் வரும். உங்களுக்கேற்பட்ட நெருக்கடி விலகும்.