/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன் (27.3.2026 - 2.4.2026)துலாம்: காளியம்மனை வழிபட நன்மை நடக்கும். சித்திரை 3,4: உங்களிடம் இருந்த மந்த நிலை மாறும். பயம் விலகும். தைரியமும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். உற்சாகமாக செயல்படுவீர். மற்றவர்களால் முடியாத வேலைகளை முடித்து லாபமடைவீர். சுவாதி: குருபார்வையால் செல்வாக்கு உயரும். குடும்ப நெருக்கடி நீங்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். தேவைக்கேற்ற பணம் வரும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். செய்து வரும் தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவும் தொண்டர்களின் பலமும் ஏற்படும்.