/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)துலாம்: லட்சுமி நாராயணரை வழிபட நன்மை நடக்கும். சித்திரை 3,4: செவ்வாய், சூரியன், சனி என சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சி வெற்றியாகும், நினைத்த வேலை நடக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும், வம்பு வழக்கு என்ற நிலை மாறும்.சுவாதி: ராகுவை குரு பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும், பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மனக் குழப்பம் விலகும். தடைபட்ட வேலை நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.விசாகம் 1,2,3: குரு பார்வை ராசிக்கு கிடைப்பதால் ஆச்சரியப்படும் வகையில் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் அதிகாரப்பதவியை நோக்கி நடைபோடுவீர். வரவேண்டிய பணம் வரும். உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.