/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன் (1.5.2026 - 7.5.2026)துலாம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.சித்திரை 3,4: இதுவரை உங்களுக்கிருந்த சங்கடம், போராட்டம் யாவும் நீங்கும். எடுக்கும் வேலைகளில் லாபம் கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.சுவாதி: மனக்குழப்பம் விலகும். வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். ஆதாயம் கூடும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.விசாகம் 1,2,3: செல்வாக்கு உயரும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.