/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)துலாம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.சித்திரை 3,4: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மறைமுகமாக தொல்லைகள் கொடுத்தோர் விலகிச் செல்வர். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.சுவாதி: வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். எடுக்கும் முயற்சி லாபம்தரும். சிலர் வசிக்கும் இடத்தை மாற்றம் செய்வீர்கள்.விசாகம் 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். வேலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும், சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும்.