உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் துலாம்

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)துலாம்: விஷ்ணு துர்கையை வழிபட நன்மை உண்டாகும்.சித்திரை 3,4: செவ்வாய் பகவானால் சுறு சுறுப்பாக செயல்படுவீர். தடைபட்ட வேலை நடக்கும். பொருளாதார நிலை உயரும். எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடியும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.சுவாதி: கேதுவும் சனிபகவானும் உயர்வுக்கு வழிகாட்டுவர். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். உடல்நிலை சீராகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வழக்கு சாதகமாகும்.விசாகம் 1,2,3: குரு சஞ்சாரம் சாதகமாக இல்லை. இருப்பினும் அவருடைய பார்வை குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கையில் பணம் புரளும். ஆரோக்கியம் சீராகும். தாய்வழி உறவு ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு உயரும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !