உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் துலாம்

வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )துலாம்: சங்கர நாராயணரை எடுத்த வேலை வெற்றியாகும்.சித்திரை 3,4: எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். வரவேண்டிய பணம் வரும். சட்ட சிக்கல் முடியும். தடைபட்ட வேலை நடந்தேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சனிக்கிழமை அன்று நிதானம் தேவை.சுவாதி: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். உடல்நிலை சீராகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வேலையில் இருப்பவர்களுக்கு  வழக்கு சாதகமாகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சனி ஞாயிறு அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.விசாகம் 1,2,3: குருப் பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கையில் பணம் புரளும். ஆரோக்கியம் சீராகும். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். ஞாயிறு அன்று உங்களுக்கிருந்த தடை விலகும். ஞாயிறு திங்களில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.சந்திராஷ்டமம்: 13.6.2026 காலை 7:28 மணி - 15.6.2026 காலை 9:53 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !