/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )துலாம்: வீரராகவப்பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.சித்திரை 3,4: எடுக்கும் வேலைகளில் நிதானமும் கவனமும் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகத் தொல்லை ஏற்படும். சிலருக்கு எதிர்பாராமல் உடல்நிலையில் பாதிப்பும் மருத்துவ செலவும் ஏற்படும். தெய்வ சிந்தனை மேலோங்கும்.சுவாதி: கேதுவும், சனியும் உங்கள் உயர்வுக்கு வழிகாட்டுவர். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.விசாகம் 1,2,3: குரு பகவான் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடியையும் இடமாற்றத்தையும் ஏற்படுத்துவார். அவருடைய பார்வை குடும்பத்தில் நிம்மதியை உண்டாகும். கையில் பணம் புரளும். ஆரோக்கியம் சீராகும். தாய்வழி உறவு ஆதரவு கிடைக்கும்.