உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் துலாம்

வார பலன் ( 3.7.2026 - 9.7.2026)துலாம்: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.சித்திரை 3,4: தேவையற்ற பயம் உண்டாகும். எடுக்கும் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். சிலருக்கு உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். எதிர்பார்ப்புகளும் இழுபறியாகும். அனைத்திலும் நிதானம் தேவை.சுவாதி: ராகு மனதளவில் குழப்பத்தை உண்டாக்குவார். லாப கேதுவும், ஆறாமிட சனியும் உங்கள் உயர்வுக்கு வழிகாட்டுவர். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். உடல்நிலை சீராகும்.விசாகம் 1,2,3: குரு பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கையில் பணம் புரளும். ஆரோக்கியம் சீராகும். தாய்வழி உறவால் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு உயரும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். புதிய வாகனம் நவீன பொருட்கள் வாங்குவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !