உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் துலாம்

வார பலன் (7.8.2026 - 13.8.2026)துலாம்: மகாலட்சுமியை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.சித்திரை 3,4: வியாபாரம் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். வரவேண்டிய பணம் வரும். அரசுவழி வேலை லாபம் தரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வெள்ளிக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.சுவாதி: குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உடல்நிலை சீராகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வெள்ளி சனி அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.விசாகம் 1,2,3: குரு பார்வைகளால் வரவேண்டிய பணம் வரும். தாய்வழி உறவின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சனிக்கிழமை அன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.சந்திராஷ்டமம்: 6.8.2026 இரவு 11:59 மணி - 9.8.2026 அதிகாலை 2:26 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !