உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் துலாம்

வார பலன் (21.8.2026 - 27.8.2026)துலாம்: துர்கையை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.சித்திரை 3,4: எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்குமுன் சந்தை நிலவரத்தை அறிவது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் அக்கறையும் கவனமும் கொள்வது அவசியம்.சுவாதி: மனதில் இனம் புரியாத குழப்பம் இருக்கும். நீங்கள் வேகமாக செயல்பட நினைத்தாலும் சூழ்நிலையும் உடல்நிலையும் அதற்கு ஒத்துழைக்காமல் போகும் என்றாலும் லாபாதிபதி லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால்  எதிர்பார்த்த பணம்வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.விசாகம் 1,2,3: தனக் காரகன் குரு பத்தாமிடத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியின் அனுமதி இல்லாமல் எந்த வேலையிலும் இறங்க வேண்டாம். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வழக்கு விவகாரம் சாதகமாகும். உடல்நிலை சீராகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !