வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன் ( 11.9.2026 - 17.9.2026 )துலாம்: மகாலட்சுமியை வழிபட நன்மை உண்டாகும்.சித்திரை 3,4: எடுக்கும் வேலைகளில் நிதானமும் கவனமும் தேவை. அனுபவசாலிகளின் அறிவுரை உங்களுக்கேற்பட்ட சங்கடங்களை இல்லாமல் செய்யும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் முன் நன்றாக திட்டமிட்டுக் கொள்வது நன்மை அளிக்கும்.சுவாதி: லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும்.விசாகம் 1,2,3: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு வழக்குகள் முடியும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். கையில் பணம் புரளும்.