உள்ளூர் செய்திகள்

யாருமே இல்லையா?

'இவர்களை எப்படி தடுப்பது...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், ஆந்திர முன்னாள்முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.சில மாதங்களுக்கு முன்பு வரை, ஆந்திராவின்முதல்வராக ஏகபோக செல்வாக்குடன் வலம் வந்தவர் தான், ஜெகன். முதல்வராக இருக்கும்போது, எங்கு சென்றாலும் கட்சிக்காரர்கள், 'ஜெகன் அண்ணா, ஜெகன் அண்ணா...' என கோஷமிட்டு புல்லரிக்க வைப்பர். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜெகன் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் தோல்வியை தழுவியது; லோக்சபா தேர்தலிலும் பெரும் சறுக்கல்.இதையடுத்து, அவரது கட்சியின் பெரும்பாலானதலைவர்கள், தற்போதைய ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நோக்கி ஓடத் துவங்கியுள்ளனர். அவர்களை தடுப்பதற்கு ஜெகன் எவ்வளவோ முயன்றும், ஒன்றும் செய்ய முடியவில்லை. பொழுது விடிகிறதோ, இல்லையோ... ஜெகன் கட்சிஎம்.எல்.ஏ.,க்கள் தினமும் தெலுங்கு தேசத்துக்கு தாவுவது வழக்கமாக உள்ளது.சமீபத்தில் இரண்டு ராஜ்யசபா எம்.பி.,க்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தெலுங்கு தேசத்துக்கு தாவி விட்டனர். இதைப் பார்த்த ஜெகன், 'இன்னும் சில நாட்களானால், கட்சியில் நான் மட்டும் தான் மீதமிருப்பேன் போலிருக்கிறது; கண்ணுக்கு எட்டிய துாரம் வரை யாரையுமே காணவில்லையே..' என, புலம்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ