பிரசாரத்துக்கு ஆள் கிடைக்குமா?
'சட்டசபை தேர்தல் வருவதற்குள் கூடாரமே காலியாகி விடும் போலிருக்கிறதே...' என, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பற்றி கிண்டல் அடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.டில்லியில், முதல்வர்ஆதிஷி தலைமையிலானஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கியதால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால், ஆதிஷியைமுதல்வராக நியமித்தார். அடுத்த சில மாதங்களில், டில்லியில் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது. ஆம் ஆத்மியின்பெரும்பாலான முக்கிய தலைவர்கள், தற்போது ஊழல் வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர், ஜாமினில் வெளியில் வந்தாலும், அவர்கள் மீதான வழக்குகளில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம் என்ற நிலை உள்ளது.இவர்கள் தவிர, கட்சியின் முக்கிய தலைவர்கள்என, ஒருசிலர் தான் மீதமுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வலதுகரமாக திகழ்ந்தவரும், டில்லி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவருமான கைலாஷ் கெலாட், சமீபத்தில் ராஜினாமா செய்தார்.கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்த அவர், மறுநாளே பா.ஜ.,வில் ஐக்கியமாகி விட்டார். இதனால் கலக்கத்தில் உள்ளார், அரவிந்த் கெஜ்ரிவால்.'போகிற போக்கை பார்த்தால், தேர்தலுக்கு பிரசாரம் செய்வதற்கு கூட கெஜ்ரிவாலுக்கு ஆள் இருக்காது போலிருக்கிறதே...' என கேலிபேசுகின்றனர், பா.ஜ.,வினர்.