‘மாட்டிக் கொண்டு முழிக்கிறார்!’
‘இலவச திட்டங்களை அறிவிப்பானேன்; பின், புலம்புவானேன்...’ என, பீஹார் மாநில அரசை கிண்டல் அடிக்கின்றனர், அங்குள்ள மக்கள். பீஹாரில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் பா.ஜ., – ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2025ல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது, ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார். ‘இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், பீஹாரில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும், 125 யூனிட் மின்சாரம் இலவசம்...’ என நிதிஷ் குமார் அறிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்றதும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். ஆனால், நான்கு மாதங்களிலேயே உடல்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், பா.ஜ.,வின் சாம்ராட் சவுத்ரியிடம் முதல்வர் பதவியை ஒப்படைத்தார். இலவச மின்சார திட்டத்தால், ஓராண்டில் அரசுக்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சாம்ராட் சவுத்ரியிடம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். பதறிய சாம்ராட் சவுத்ரி, ‘வருமான வரி செலுத்துவோரும், வசதி படைத்தவர்களும் இலவச மின்சார திட்டத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால், நிர்வாகத்தையே நடத்த முடியாது...’ என, வேண்டுகோள் விடுத்துள்ளார். பீஹார் மக்களோ, ‘இலவச மின்சார திட்டத்தை அறிவித்த நிதிஷ் குமார் ஜாலியாக இருக்கிறார். பாவம், சாம்ராட் சவுத்ரி தான் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்...’ என்கின்றனர்.