உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / அதிகரிக்கும் மவுசு!

அதிகரிக்கும் மவுசு!

'தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், இவருக்கு மட்டும் எப்படி இவ்வளவு செல்வாக்கு...' என, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், அங்குள்ள சக அரசியல்வாதிகள். மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா நிறுவனரான மறைந்த பால் தாக்கரேயின் சகோதரர் மகன் தான், ராஜ் தாக்கரே. பால் தாக்கரேக்கு பின், ராஜ் தாக்கரே தான், சிவசேனா தலைவராவார் என, அனைவரும் எதிர்பார்த்தனர்.ஆனால், தன் மகன் உத்தவ் தாக்கரேவை அரசியல்வாரிசாக அறிவித்தார், பால் தாக்கரே. இதனால் அதிருப்தி அடைந்த ராஜ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியை துவக்கினார். உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அரசியல் செய்து வந்தார். ஆனால், எந்த தேர்தலிலும் இவரால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை.இந்த நிலையில் தான், பழைய பகையை மறந்து, உத்தவ் தாக்கரேவுடன் கைகுலுக்க தயாராகிவருகிறார், ராஜ் தாக்கரே. உத்தவ் தாக்கரேவும் இதற்கு சம்மதித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட பேச்சு நடந்து வருகிறது.இதையறிந்த பா.ஜ., சிவசேனா ஷிண்டே தரப்பு உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், ராஜ் தாக்கரேவை மறைமுகமாக அணுகி, தங்களுடன் கூட்டணி வைக்கும்படி வற்புறுத்தி வருகின்றனர்.மஹாராஷ்டிரா மக்களோ, 'ராஜ் தாக்கரேக்கு, 'மவுசு' அதிகரிக்குதே...' என, ஆச்சரியப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ