உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / டிவி சீரியலும், விளம்பரமும்!

டிவி சீரியலும், விளம்பரமும்!

'தொகுதி மக்களின் குறைகளை கேட்கலாம் என்று தான் போனேன்... ஆனால், இப்படி ஒரு குறையை கூறுவர் என எதிர்பார்க்கவில்லை...' என்று ஆச்சரியப்படுகிறார், தேசியவாத காங்கிரஸ் - சரத் பவார் பிரிவு எம்.பி., சுப்ரியா சுலே. இவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான சரத் பவாரின் மகள். கடந்த, 2009ல் இருந்து, மஹாராஷ்டிராவின் பாரமதி தொகுதி எம்.பி.,யாக உள்ளார். சமீபத்தில், தன் தொகுதி மக்களின் குறைகளை கேட்பதற்காக அங்கு சென்றிருந்தார், சுப்ரியா சுலே. பலரும், 'எங்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லை; சாலை வசதி இல்லை...' என, குறைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் நின்றிருந்த ஒரு பெண், தயங்கி தயங்கி சுப்ரியாவிடம் வந்தார். அவரிடம், 'உங்களுக்கு என்ன பிரச்னை?' என, சுப்ரியா கேட்டார். அந்த பெண், 'என் ஒரே பொழுதுபோக்கு, 'டிவி' சீரியல் பார்ப்பது தான். ஆனால், சீரியல்களுக்கு இடையில் அளவுக்கு அதிகமான விளம்பரங்களை ஒளிபரப்புகின்றனர். உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி, விளம்பரங்களை குறைத்தால் நன்றாக இருக்கும்...' என்றார், அப்பாவியாக. இதைக் கேட்டதும், அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர். சுப்ரியாவோ, அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு, 'அடுத்த முறை தொகுதிக்கு வரும்போது, சீரியல்களுக்கு இடையில் எவ்வளவு விளம்பரங்கள் வருகின்றன என, எண்ணி விட்டுத்தான் வரணும் போலிருக்கிறது...' என முணுமுணுத்தபடியே கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ