உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

விலங்குகளின் கேட்கும் திறன்

இயற்கை சீற்றங்களை விலங்குகள் முன்பே கணிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். யானை, நாய் போன்ற சில விலங்குகள் அகஒலியை (இன்ப்ரா சவுண்ட்) கேட்கும் திறன் வாய்ந்தவை. இந்த அகஒலி மூலம் தான் கடலுக்குள் திமிங்கலங்கள் தமக்குள் செய்தி பரிமாறுகின்றன. மனிதனின் கேட்கும் திறனுக்கும் அப்பால் உள்ள இந்த அலைநீளங்களில் வெளிப்படும் அகஒலியை சில விலங்குகள் உணர முடியும். இயற்கைப் பேரிடர் சமயத்தில் இயல்புக்கு மாறாக கூடுதலாக அகஒலி ஏற்படும்போது, அதில் குழம்பி என்ன, ஏது என்று தெரியாமல் பாதுகாப்பு தேடி ஓடுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி