அறிவியல் ஆயிரம்
கடலோர மக்களுக்கு பாதிப்பு
உலகின் முக்கிய ஆற்று டெல்டா பகுதிகள், கடல் நீர்மட்டம் உயர்வதை விட வேகமாக தாழ்வாகி வருகின்றன என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. பெரிய 40 ஆற்று டெல்டாக்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. 18 ஆற்று டெல்டா, கடல்நீர்மட்ட உயர்வை விட, வேகமாக தாழ்ந்து வருகிறது. இதனால் கடலோர பகுதிகளில் 23.60 கோடி பேர் பாதிக்கப்படுவர். பொதுவாக ஆற்று டெல்டா என்பது ஆறு கடலில் வந்து சேரும் இடத்தில் அது கொண்டு வரும் வண்டல் மண்ணை சேர்ப்பதால் உருவாகும் சமவெளிப் பகுதியாகும். இது முக்கோண வடிவில் இருக்கும்.