அறிவியல் ஆயிரம்
பழமையான தண்ணீர்பூமிக்கு அடியில் உள்ள வாழ்க்கை, பிரபஞ்சத்தின் வரலாறு பற்றி ஆய்வு செய்ய கனடாவின் ஒன்டாரியோ சுரங்கத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதில் 1.60 கி.மீ., துார ஆழத்தில் தோண்டிய போது, பாறையில் திரவ தண்ணீரை கண்டுபிடித்தனர். இது 150 - 200 கோடி ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதற்காக எந்தக் கால நிர்ணய நுட்பங்களையும் பயன்படுத்தவில்லை. நிலத்தடி திரவங்களில் கரைந்திருந்த ஹீலியம், நியான் மந்த வாயுக்கள் ஆராயப்பட்டன. இந்த வேதியியல் தடயங்களின் அடிப்படையில், அந்த தண்ணீரின் காலம் கண்டறியப்பட்டது.