மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : மீண்டும் நிலவு பயணம்
25-Sep-2025
அறிவியல் ஆயிரம்எதிர்கால நிலவு வீடுவிஞ்ஞானிகள் நிலவில் தங்கி ஆய்வில் ஈடுபடுவதற்கு பிரத்யேக கண்ணாடி குமிழ்களை நிறுவ அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் திட்டமிட்டுள்ளது. இது நிலவு மண், துாசியில் இருந்து தயாரிக்கப்படும். இது கோள வடிவில் அமைக்கப்படும். அகலம் 1000 - 1600 அடி இருக்கும். இது பாலிமர்களால் ஆன சிறப்பு கண்ணாடியால் உருவாக்கப்படும். இது சிறிய விண்கற்கள், நிலவில் ஏற்படும் நிலநடுக்கம் போன்றவற்றால் பாதிக்காத வகையிலும், இரும்பை விட வலிமையாகவும் இருக்கும். தேவையான மின்சாரம் சோலார் மூலம் பெறப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
25-Sep-2025