உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : ஷாக் அடிக்கும் மீன்

அறிவியல் ஆயிரம் : ஷாக் அடிக்கும் மீன்

அறிவியல் ஆயிரம்'ஷாக்' அடிக்கும் மீன்'எலெக்ட்ரிக் ஈல்' எனும் ஒருவகை விலாங்கு மீன் இனம், தன் இரையை வேட்டையாட, எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மின்சாரத்தை வெளிப்படுத்தி தாக்கும். இதற்கு 'மின் விலாங்கு' மீன் என பெயர். எடை 20 கிலோ. நீந்தும் வேகம் மணிக்கு 8 கி.மீ., வாழ்நாள் 22 ஆண்டுகள். நீண்ட உருளை வடிவத்தில் இருக்கும். உடலின் மேற்புறம் கறும் சாம்பல், அடி வயிற்றுப் பகுதி மஞ்சள், வெள்ளை நிறத்தில் காணப்படும். நன்னீர்வாழ் மீனான இது, சேற்றுக்கு அடியிலேயே வாழும். இதன் உடம்பில் 650 வோல்ட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது. உடலிலுள்ள 'எலெக்ட்ரோசைட்ஸ்' இதை உருவாக்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !