அறிவியல் ஆயிரம் : செயற்கைக்கோளுக்கு மாற்று
அறிவியல் ஆயிரம்செயற்கைக்கோளுக்கு மாற்றுசூரிய ஒளியில் செயல்படும் ஆளில்லா 'டிரோன்'-ஐ பிரிட்டன் உருவாக்கியுள்ளது. இதன் இரண்டு கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதன் பெயர் 'பாஷா 35'. எடை 150 கிலோ. இறக்கையின் நீளம் 115 அடி. 70 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 89 கி.மீ., வேகத்தில் பறக்கும். புவி கண்காணிப்பு, எல்லை பாதுகாப்பு, தகவல் தொடர்பு, பேரிடர் நிவாரணம் உள்ளிட்டவற்றுக்கு செயற்கைக்கோளுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். 20 மாதங்கள் செயல்பாட்டில் இருக்கும். செயற்கைக்கோளுடன் ஒப்பிடுகையில் இதன் செலவும் குறைவு.