அறிவியல் ஆயிரம் : குறையும் வன உயிரினங்கள்
அறிவியல் ஆயிரம்குறையும் வன உயிரினங்கள்வன உயிரினங்களின் எண்ணிக்கை 50 ஆண்டுகளில் 73% சரிந்துள்ளது என இயற்கைக்கான உலக நிதியம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை. விலங்குகள், பறவைகள் உட்பட வன உயிரினங்களுக்கும் பங்கு உள்ளது. இவற்றின் எண்ணிக்கை குறைவதற்கு, நோய், பருவநிலை மாற்றம், மாசு, வன ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தாலும், வேட்டையாடுதல் உட்பட மனிதர்களின் நடவடிக்கை இதில் முக்கியமானதாக உள்ளது. வன உயிரினங்களும் இருந்தால் தான் பூமியின் இயற்கை சமநிலை நிலைத்திருக்கும்.