அறிவியல் ஆயிரம் : ஹைட்ரஜன் ரயில்
அறிவியல் ஆயிரம்'ஹைட்ரஜன்' ரயில்உலகின் ரயில் போக்குவரத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு பின் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய ரயில்வேயில் பெரும்பாலும் மின்சாரத்தில் இயங்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 'ஹைட்ரஜனில்' இயங்கும் ரயில் அறிமுகபடுத்தப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இது ஹைட்ரஜன் செல்லில் இயங்கும். இது ஹைட்ரஜன், ஆக்சிஜன் இணைந்து ரயிலுக்கு தேவையான மின் சக்தியை வழங்குகிறது. டீசல் ரயில் போல இதில் கார்பன் வெளியீடு இல்லை. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது.