உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : விண்கல் விலை ரூ. 34 கோடி

அறிவியல் ஆயிரம் : விண்கல் விலை ரூ. 34 கோடி

அறிவியல் ஆயிரம்விண்கல் விலை ரூ. 34 கோடி'என்.டபிள்யு.ஏ.' என்ற செவ்வாய் விண்கல் மதிப்பு ரூ. 34 கோடி இருக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இது 2023ல் ஆப்ரிக்காவின் நைஜரில் கண்டெடுக்கப்பட்டது. பின் சீனாவின் ஷாங்காய் ஆய்வகத்துக்கு அனுப்பி உறுதி செய்யப்பட்டது. இது செவ்வாய் கோளின் மீது விண்கல் மோதலால், அதன் பாறை துகள் வெளியேறி, 22 கோடி கி.மீ., துாரம் பயணித்து பூமியில் விழுந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் எடை 24.67 கிலோ. இதுதான் எடைமிக்க செவ்வாய் விண்கல். இதற்கு முன் 2021ல் 14.52 கிலோ எடையுள்ள 'தயோடெனி 002' விண்கல் கண்டெடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !