அறிவியல் ஆயிரம்:முதல் சூப்பர் மூன்
முதல் 'சூப்பர் மூன்'வானியல் ஆர்வலர்களுக்கு ஆண்டின் தொடக்கமே சிறப்பாக அமைகிறது. ஆண்டின் (2026) முதல் 'சூப்பர் மூன்' நிகழ்வு ஜன.,3 மாலை 5:45 மணிக்கு மேல் தோன்றுகிறது. பூமி - நிலவு இடையே சராசரி துாரம் 3.84 லட்சம் கி.மீ., இதில் அதிகமாக 4.06 லட்சம் கி.மீ., குறைவாக 3.56 லட்சம் கி.மீ., துாரத்தில் இருந்து நிலவு, பூமியை சுற்றி வரும். இதில் பூமிக்கு அருகில் வரும் போது 'சூப்பர் மூன்' ஏற்படுகிறது. இது சாதாரணமாக தெரியும் நிலவை விட 14% பெரியதாகவும், 30% கூடுதல் ஒளியுடனும் பிரகாசிக்கும். ஒரே நேர்க்கோட்டில் சூரியன், பூமி (நடுவில்), நிலவு வரும்போது 'சூப்பர் மூன்' ஏற்படுகிறது.