அறிவியல் ஆயிரம்:பேசும்போது உருவாகும் நீர்த்துளி
பேசும்போது உருவாகும் நீர்த்துளிஅதிக குளிர் இருக்கும் இடங்களில் பேசும் போது, வாயில் இருந்து புகை வருவது போல இருக்கும். இதற்கு காரணம் காற்றில் உள்ள நீராவி தான். குளிர் பகுதிகளில் நாம் பேசினால் வாயிலிருந்து கொஞ்சம் ஈரப்பதத்துடன் காற்று வெளியே வரும். அப்போது அதில் உள்ள நீராவி கடும் குளிரில், குளிர்ந்து திரவமாக மாறி நுண் திவலைகளாக (நீர்த்துளி) உருவாகும். அதுதான் புகை போல நமக்கு தெரிகிறது. அப்புகை என்பது மிக நுண்ணிய நீர்த்துளிகளின் தொகுப்பு. இதன் அடிப்படையில் தான், ஐஸ்கட்டி உள்ள கண்ணாடி டம்ளருக்கு வெளியே நீர்த்துளிகள் தோன்றுகிறது.