உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / ஏற்றுக்கொண்ட பணியை செம்மையாய் செய்யும் தினமலர்

ஏற்றுக்கொண்ட பணியை செம்மையாய் செய்யும் தினமலர்

ஜனநாயகத்தின் நான்காம் தூணாக, பத்திரிகை துறையில் தனக்கென ஒரு செம்மைபிறழா பாணியினை கையாண்டு, நம் தமிழ் சமூகத்திற்கு 75 ஆண்டுகளாக ஆற்றிவருகின்ற பணி என்பது, காலத்தினால் தவிர்க்க முடியாத ஓர் அற்புத கைங்கர்யம்! எண்பதுகளில் வெளிவந்த, ஆரம்பகால சிறுவர் மலரில் கந்த புராணம், விநாயக புராணம், சபரிமலை ஐயப்பன் கதைகள் போன்றவற்றை, வெள்ளிதோறும் எங்கள் வீட்டுப் பிள்ளைகள் படித்ததும், மற்றவர்களிடம் அதைப்பற்றி பேசியதும் இன்றளவும் பசுமரத்தாணியாய் நினைவில் நிழலாடுகிறது. தமிழ்ச்சமூகத்திற்கு மிக அவசியமான, நேர்கொண்ட அரசியற்சிந்தனைகளையும் ஆன்மிக கருத்துக்களையும் எல்லா நன்னாளிலும் அறிவுலக மேதைகளை கொண்டு, கதைகளாகவும், கட்டுரைகளாகவும், தொடர்களாகவும் நாளிதழில் தரும் பாங்கு, ஏற்றுக்கொண்ட பணியினை செம்மையுடன் செய்வதற்கு சாட்சி. தேச நலனை கருத்தில் கொண்டு, படிப்பவர்களை பக்குவப்படுத்துவதுடன் பண்படுத்தவும் செய்கின்ற செய்திகளை நாள் தோறும் முந்தித் தருவதில் முத்திரை பதிக்கும் நாளேடு 'தினமலர்'. கருப்படும் பொருளை, உருப்பட வைக்கும் தினலமர் எனுமோர் 75 ஆண்டுகால பொக்கிஷம் நூற்றாண்டு விழா காண வாழ்த்துகிறேன். மகிழ்வுடனே என்றும், சு.இரமேஷ் நிர்வாக இயக்குனர், அப்பரேஷனல் எனர்ஜி கரூப் இந்திய லிட்., சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை