தமிழ்த்தாய் வாழ்த்து போல இளமை மிடுக்குடன் பீடுநடை போடுகிறது எங்கள் ‛தினமலர் நாளிதழ்
மக்கள் மனதை தினமும் மலர வைக்கும் ‛தினமலர்' நாளிதழின் ‛பவள விழா' கொண்டாட்டங்களுக்கு ‛வெள்ளி விழா' வாசகனின் மனமார்ந்த பாராட்டுகள்.நான் வாசகனாகிய 1975ம் ஆண்டில் இருந்து, ‛உன் சீரிளமை திறம் வியந்து மறந்து வாழ்த்துதுமே' எனச் சொல்லும் தமிழ்த்தாய் வாழ்த்து போல, இளமை மிடுக்குடன் நடை போடுகிறது தினமலர்.‛வாசகர்களுக்காகத் தான் பத்திரிகையே தவிர பத்திரிகைகளுக்காக வாசகர்கள் என்று இல்லை' எனும் பத்திரிகை தர்மத்தை நன்கு உணர்ந்தவர்கள் வரிசையில் டி.வி.ஆர்., தான் முதலில் நிற்கிறார். அவர் காட்டிய வழியில் நடப்பது வாசகர்களாகிய எங்களுக்கு பெருமை!‛ஒரு நிறுவனத்தின் முக்கியமான ஆலோசனை சாதாரண மனிதனிடம் இருந்து வரும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ‛வாசகர்களுக்கே முன்னுரிமை' எனச் செயல்படும் நாளிதழ் எங்கள் தினமலர்; திராவிடம் கருமேகங்களுக்கு மத்தியில் தேசபக்தியையும் தெய்வீகத்தையும் பரப்புவது எங்கள் தினமலர்.இத்தருணத்தில் எனக்கோர் வேண்டுகோள்; ‛துக்ளக் ஆண்டு விழா' போல், தினமலர் நாளிதழும் வாசகர்களை அழைத்து ‛ஆண்டு விழா' நடத்த வேண்டும். தமிழர்கள் அதிகள் வாழும் மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களிலும் பதிப்பு துவக்க வேண்டும். என் ஆசை நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்.எஸ். ரவிசங்கர்,சென்னை.