உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி: பைபாஸ் சந்திப்பில் பள்ளம் சீரமைப்பு

தினமலர் செய்தி எதிரொலி: பைபாஸ் சந்திப்பில் பள்ளம் சீரமைப்பு

விழுப்புரம்: 'தினமலர்' செய்தி எதிரொலியாக விழுப்புரம் அருகே பைபாஸ் சந்திப்பில் மெகா சைஸ் பள்ளம் சீரமைக்கப்பட்டது. விழுப்புரம் அருகே ஜானகிபுரம் ரவுண்டானா மேம்பாலத்தின் கீழ், திருச்சி மற்றும் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதி உள்ளது. இவ்வழியாக விழுப்புரம் நகரில் இருந்தும், நகருக்குள்ளும் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இப்பகுதி சாலை வளைவு தார் சாலையில் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மெகா சைஸ் பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ