தினமலர் எதிரொலி... செடி, கொடிகள் அகற்றம்
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் இருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குடியிருப்பிற்கு செல்லும் நடைபாதையில், செடி, கொடிகள் புதர்போல மண்டி கிடந்தது. நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் சார்பில், நடைபாதையில் மண்டிகிடந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டுள்ளது.