தினமலர் செய்தி எதிரொலி: பள்ளம் சீரமைப்பு
சோழவந்தான்: சோழவந்தான் தெற்குரதவீதி பள்ளிவாசல் தெரு சந்திப்பில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணிக்காக தோண்டிய பள்ளம் சீரமைக்கப்படவில்லை. இதனால் அதே இடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டது. வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளால் வீடுகள் குலுங்கின. அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைத்தனர். அப்பகுதியினர் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.