உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி :ரோட்டோர மணல் அகற்றம்

தினமலர் செய்தி எதிரொலி :ரோட்டோர மணல் அகற்றம்

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசியில் போக்குவரத்து நிறைந்த முக்கிய ரோடுகளில் ஆக்கிரமித்து இருந்த மணல் அகற்றப்பட்டது. சிவகாசி நகரில் பெரும்பாலான முக்கிய ரோடுகளில் இருபுறமும் பாதி அளவு மணல் கொட்டிக் கிடக்கின்றது. பஸ் ஸ்டாண்டிலிருந்து சாத்துார் செல்லும் ரோடு, காந்தி ரோடு, ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு, பைபாஸ் ரோடு, விளாம்பட்டி ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளில் இருபுறமும் பாதியளவிற்கு மணல் கிடைக்கின்றது. அதிலும் குறிப்பாக சென்டர் மீடியன் அமைக்கப்பட்ட ரோடுகள் குறுகியதாக மாறிய நிலையில் அதிலும் மணல்கள் ஆக்கிரமித்துள்ளதால் ரோடு மேலும் குறுகி விட்டது. இதில் டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி வழுக்கி விழுகின்றனர். எனவே நகர் முழுவதும் ரோட்டில் கிடக்கும் மணல்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் ரோட்டில் ஆக்கிரமித்து இருந்த மணல்கள் அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை