உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி சதுரங்கப்பட்டினம் டச்சுக்கோட்டையில் புல்வெளி பணிகள் துவக்கம்

தினமலர் செய்தி எதிரொலி சதுரங்கப்பட்டினம் டச்சுக்கோட்டையில் புல்வெளி பணிகள் துவக்கம்

சதுரங்கப்பட்டினம்: சுற்றுலா மேம்பாட்டிற்காக, சதுரங்கப்பட்டினம் டச்சுக்கோட்டை முகப்பில் புல்வெளி அமைக்கும் பணியை தொல்லியல் துறை துவக்கியுள்ளது.கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பகுதியில், கி.பி.17ம் நுாற்றாண்டு கால டச்சுக்கோட்டை பிரசித்திபெற்றது. டச்சு என அழைக்கப்படும் நெதர்லாந்து நாட்டின் வர்த்தகர்கள், அக்காலத்தில் இங்கு குடியேறினர். கடற்கரை அருகில், செங்கற்களில் கோட்டை அமைத்து ஆடை, நறுமண பொருட்கள் விற்றனர். பிற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்தனர்.நாளடைவில் அவர்களிடம் பொருளாதார முன்னேற்ற வளர்ச்சி ஏற்பட்டதை கண்ட ஆங்கிலேயர், 1796 - 1818ம் ஆண்டுகளில், இங்கு படையெடுத்து கோட்டையை கைப்பற்றி அழித்தனர். தற்போது இக்கோட்டை வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ள தொல்லியல்துறை, அங்கு அகழாய்வு நடத்தி, வாழ்விட கட்டடம், நடன கூடம், தானிய கிடங்குகள், சீனா, ஜெர்மன் ஆகிய நாட்டு சுடுமண் பாத்திர கலன்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்தது. டச்சு பிரமுகர்கள் கல்லறைகள், நுழைவாயிலில் பீரங்கிகள் ஆகியவைகளும் உள்ளன.கோட்டை வளாக இடிபாட்டு கட்டடங்கள், சுற்றுச்சுவர் ஆகியவற்றை, பழங்கால முறையில் புனரமைத்து தொல்லியல்துறை பாதுகாக்கிறது. சரித்திர கால சான்றாக விளங்கும் கோட்டை வளாகத்தில், சுற்றுலா மேம்பாட்டிற்காக பசுமை புல்வெளி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் குறித்து, நம் நாளிதழில், கடந்த ஆக., மாதம் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, கோட்டை வளாகத்தில் புல்வெளி அமைக்க தொல்லியல் துறை முடிவெடுத்தது. தற்போது செம்மண் நிரப்பி சமன்செய்து, எரு இட்டு, நீர் இறைக்கும் சுழல் பம்ப் ஆகியவை அமைத்து, பணிகளை துவக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sriraman Ts
நவ 03, 2024 06:58

நன்றி நவிலல் மட்டும்தானா.


Sriraman Ts
நவ 03, 2024 06:56

சதுரங்க பட்டினம் சாட்ராஸ் என பழைய காலத்தில் அதாவது 1950/55 ஆண்டுகளில் சொல்லப்படும். பஸ் போர்டுகளில் மெட்ராஸ் - சாட்ராஸ் என இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை