உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி சாலையோரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மும்முரம்

தினமலர் செய்தி எதிரொலி சாலையோரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மும்முரம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி கிராமத்தில், சாலவாக்கம் - திருமுக்கூடல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை சுற்றுவட்டார கிராமத்தினர் பயன்படுத்தி, வாலாஜாபாத், செங்கல்பட்டு, சாலவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு, தினமும் சென்று வருகின்றனர். இந்நிலையில், எடமச்சி கிராமத்தில் உள்ள சாலையின் ஓரங்களில், விபத்து ஏற்படுவதை தடுக்க மண் கொட்டப்பட்டு இருந்தது. கடந்த, பெஞ்சல் புயலினால் ஏற்பட்ட மழையின்போது, சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக, சாலையோர பள்ளத்தில் நிலைத்தடுமாறி விழுந்து, அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் கடந்த 28 -ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சாலையோர பள்ளத்தால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, அப்பகுதியில் கான்கீரிட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ