மேலும் செய்திகள்
எரியாத மின்விளக்கு: இருளில் மூழ்கிய ரோடு
17-Aug-2026
முதுகுளத்துார்:தினமலர் நாளிதழ் செய்தி காரணமாக முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உயர்கோபுரம் மின்விளக்கு சரி செய்யப்பட்டது. முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அமைக்கப்பட்ட உயர்கோபுரம் மின்விளக்கு எரியாமல் காட்சிப்பொருளாக இருந்தது. இரவு நேரத்தில் ரோடு இருள்சூழ்ந்து இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து உயர்கோபுரம் மின்விளக்கு சரி செய்யப்பட்டு எரிகிறது. இதனால் தினமலர் நாளிதழுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
17-Aug-2026