உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு

 சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு

சாலவாக்கம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, தோட்டநாவல் - கடல்மங்கலம் செல்லும் சாலையோரம் சாய்ந்திருந்த மின்கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், தோட்டநாவலில் இருந்து, கடல்மங்கலம் வரை செல்லும் சாலையோரம் விவசாய நிலங்கள் உள்ளன. அங்குள்ள விவசாய நிலங்களுக்கு, மின் இணைப்பு வழங்க சாலையோரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அப்பகுதியில், சில தினங்களுக்கு முன் பெய்த காற்று மழையால் மின்கம்பம் சாய்ந்து இருந்தது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வந்தனர். சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, கடந்த 21ம் தேதி நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள், சாய்ந்த மின்கம்பத்தை சீரமைத்துள்ளனர். � தோட்டநாவல் கிராமத்தில் சாலையோரம், விபத்து ஏற்படுத்தும் வகையில் சாய்ந்து இருந்த மின்கம்பம். (கோப்பு படம்) � நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, சாய்ந்து இருந்த மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை