உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / டெய்லரின் குடும்பத்திற்கு நிவாரணம் 

டெய்லரின் குடும்பத்திற்கு நிவாரணம் 

ஆவடி:ஆவடி அடுத்த பாலவேடு பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 70; டெய்லர். இவர், மே 1ம் தேதி இரவு, 'டி.வி.எஸ்., எக்ஸல்' மொபட்டில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அம்பேத்கர் தெரு அருகே வந்தபோது, மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட 5 அடி பள்ளத்தில், மொபட்டுடன் விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவர், கடந்த 3ம் தேதி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.சாலையில் வெளிச்சம் இல்லாத பகுதியில், போதிய பாதுகாப்பின்றி பள்ளம் தோண்டி வைத்ததே விபத்திற்கான காரணம் என, குற்றச்சாட்டு வலுத்தது. இது குறித்து நம் நாளிதழில், கடந்த 5ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, ஆவடி மாநகராட்சி சார்பில், அலட்சியமாக செயல்பட்ட ஒப்பந்ததாரரிடம் 5 லட்சம் ரூபாய் பெற்று, இறந்த பச்சையப்பன் மனைவி கஸ்துாரியிடம் நேற்று வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ