உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / பாசன கால்வாயில் பொருத்திய மின் மோட்டார்கள் அகற்றம்

பாசன கால்வாயில் பொருத்திய மின் மோட்டார்கள் அகற்றம்

வாலாஜாபாத்:விவசாய நிலங்களுக்கான பாசன கால்வாயில், திருட்டு தனமாக தண்ணீர் எடுக்க பயன்படுத்திய மின் மோட்டார்கள் அகற்றம் செய்யப்பட்டுஉள்ளன. வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரியில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான 5,300 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரியில் பருவ மழைக்காலத்தில் நிரம்பும் தண்ணீரைக் கொண்டு, 22 கிராமங்களை சுற்றி உள்ள 5,850 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அதன்படி, தென்னேரி ஏரியில் இருந்து, தொள்ளாழிக்கு தண்ணீர் செல்லும் பாசன கால்வாய் உள்ளது. அக்கால்வாயில், தேவரியம்பாக்கம், மதுரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சிலர், மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி தங்களது நிலங்களுக்கு பயன்படுத்தினர். இதனால், தொள்ளாழியில் சாகுபடி நிலங்கள் பாசனமின்றி பாதிப்பதாக அப்பகுதி விவசாயிகள் புலம்பி வந்தனர்.இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் தொடர்ச்சியாக, தொள்ளாழி பாசன கால்வாயில் திருட்டுதனமாக பொருத்தப்பட்டிருந்த நீர் உறிஞ்சும் மின் மோட்டார்களை, வாலாஜாபாத் மின்வாரிய ஊழியர்கள் அகற்றம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை