உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / அச்சுறுத்திய ரேஷன் கடை கட்டடம் சீரமைப்பு; தினமலர் செய்தி எதிரொலி

அச்சுறுத்திய ரேஷன் கடை கட்டடம் சீரமைப்பு; தினமலர் செய்தி எதிரொலி

உடுமலை; பராமரிப்பு இல்லாமல், மக்களை அச்சுறுத்தி வந்த, வல்லக்குண்டாபுரம் ரேஷன் கடை கட்டடம், 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.குடிமங்கலம் ஒன்றியம், விருகல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், வல்லக்குண்டாபுரம் கிராமத்தில், ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. அப்பகுதியை சேர்ந்த,700க்கும் அதிகமான ரேஷன்கார்டுதாரர்கள் கடையில் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், ரேஷன் கடை கட்டடம், போதிய பராமரிப்பு இல்லாமல், மக்களை அச்சுறுத்தி வந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, இடிந்து விழும் மேற்கூரைக்கு கீழ், அச்சத்துடன் நின்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலையில் மக்கள் இருந்தனர். ரேஷன் பொருட்களை இருப்பு வைக்கவும், ரேஷன் கடை பணியாளர்கள் திணறி வந்தனர்.மழை காலங்களில் பொருட்கள் வினியோகமும் பாதித்து வந்தது. அசம்பாவிதம் ஏற்படும் முன் ரேஷன் கடை கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை, கடந்த, மே 29ல், 'தினமலர்' நாளிதழில் செய்தியாக வெளியானது. இதையடுத்து, ரேஷன் கடையை ஆய்வு செய்த கூட்டுறவு துறை அதிகாரிகள், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர். அதன்படி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ