உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / செய்தி எதிரொலியால் ஒரே மாதத்தில் சேதமடைந்த சாலை திருத்தணியில் சீரமைப்பு பணி துவக்கம் அதிகாரிகளின் மீது நடவடிக்கை பாயுமா?

செய்தி எதிரொலியால் ஒரே மாதத்தில் சேதமடைந்த சாலை திருத்தணியில் சீரமைப்பு பணி துவக்கம் அதிகாரிகளின் மீது நடவடிக்கை பாயுமா?

திருத்தணி:திருத்தணி, பழைய பஜார் தெருவில், தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டன.இதற்காக, சிமென்ட் சாலை சேதப்படுத்தியதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக, திருத்தணி அரசு மருத்துவமனை, அரசு பள்ளி மற்றும் நகரின் முக்கிய பகுதிகளுக்கு செல்லும் சாலையாக பழைய பஜார் தெரு அமைந்துள்ளது. சேதமடைந்த இச்சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து காயமடைந்து வந்தனர். இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் இரண்டு மாதங்களுக்கு முன், 300 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் சாலையாக மாற்ற, 16 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து 'டெண்டர்' விடப்பட்டது.ஆனால், ஒப்பந்தாரர் முறையாக சிமென்ட் சாலை அமைக்காமல், தரமற்ற ‛எம் சாண்ட்' மண்ணால் அமைத்தார். கடந்த மாதம் பணிகள் முடிந்து சிமென்ட் சாலை பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால், அரசு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை.இதனால், சிமென்ட் சாலையில் துாசி பறந்தும், 20 நாட்களிலேயே சாலை சேதமடைந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.மேலும், அப்பகுதி பெண்கள் துடப்பத்தால் சிமென்ட் சாலையை பெருக்கி, முகத்தில் துணியை கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக, மீண்டும் பழைய பஜார் சாலையை புதுப்பிக்கும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இதனால், அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ