வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தினமலர் இப்பொல்லாம் திமுக பக்கம் லைட்டா சாயுறமாதிரி டவுட் வருதே
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: விஜய் மாநாடு நடத்த அனுமதிதருவதற்கு, 21 கேள்விகளை போலீசார் கேட்டுள்ளனர். தி.மு.க., மாநாடுகள் நடத்தும்போது, இப்படித்தான் கேள்விகள் கேட்கப்பட்டனவா? மாநாட்டை, வரும் 23ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலம் தாழ்த்தவே, போலீசார் இவ்வாறு செய்கின்றனர்.டவுட் தனபாலு: தி.மு.க., நடத்துற மாநாட்டுக்கும் இதே மாதிரி கேள்விகள் இருக்கும்...ஆனா, அவற்றை போலீசாரேகேட்டு, அவங்களே பதிலும் எழுதி, 'சட்டுபுட்டு'ன்னு அனுமதிகுடுத்துடுவாங்க... அந்த வெட்டி வேலையை ஆளுங்கட்சியினருக்கு தரவே மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!ஸ்ரீரங்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டி: திருச்சி மத்திய மாவட்டத்தில் கட்சியினருக்கு கொடுப்பதற்காக, மாதந்தோறும் ஒயின் ஷாப்கள்வாயிலாக பணம் வசூலிக்கப்பட்டது. அந்தப் பணம், 11 மாதங்களாக கொடுக்கப்படவில்லை. கட்சியினருக்கு ஒயின் ஷாப் பணத்தை பிரித்துக் கொடுக்க, மாவட்ட செயலர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரஷர், சுகரால் அவதிப்படும் கட்சியினர் மருத்துவ செலவுக்காவது பயன்படும். டவுட் தனபாலு: குடிச்சு குடிச்சு குடல் வெந்து போன அப்பாவி, 'குடி'மகன்கள், பாட்டிலுக்கு கூடுதலா, 10 ரூபாயை மனமு வந்து ஒண்ணும் குடுக்கலை... சாபம் விட்டுட்டே தான் குடுக்குறாங்க... அந்த பணத்துல, பிரஷர், சுகருக்கு மருந்து வாங்கி சாப்பிட்டா, குணமாகுமாஎன்பது, 'டவுட்' தான்!தமிழக முதல்வர் ஸ்டாலின்: ராகுல் அவர்களே... தங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும்,அப்போது நாம் ஒன்றாக சென்னையில் சைக்கிளில் பயணிப்போம். சைக்கிள்பயணம் முடிந்ததும், என் இல்லத்தில் இனிப்புடன் கூடிய, அறுசுவை தென்னிந்தியஉணவை உண்டு மகிழ்ந்திடுவோம்.டவுட் தனபாலு: நீங்க ரெண்டு பேரும், 'பளபள'ன்னு இருக்கிற இ.சி.ஆர்., சாலையில்சைக்கிள் பயணம் போக கூடாது... திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டையில இருக்கிற முட்டு சந்துகள்ல சைக்கிள் ஓட்டணும்... அப்ப தான், அந்த சாலைகள்ல நடக்கவே மக்கள் எவ்வளவு சாகசம் செய்றாங்க என்ற உண்மை, உங்களுக்கு புலப்படும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தினமலர் இப்பொல்லாம் திமுக பக்கம் லைட்டா சாயுறமாதிரி டவுட் வருதே