வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அமைச்சருக்கு 'நெஞ்சில் உத்திரம் கொட்டுகிறது ' வருத்தம் வருத்தத்துக்காக வருத்தம் என்னமா உருகுகிறார்
அது சரி உண்மையான இந்துக்களை கேள்வி கேட்கும் அறிவாளிகள் மதத மதத்துகாரங்களை கேட்காதீங்க சரியா?
தமிழக ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு: நடிகை நமீதா இஸ்லாமியராக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தால், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஊழியர்கள்அவரை தடுத்திருக்கலாம். இது குறித்து விசாரித்து, தவறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கைஎடுக்கப்படும். நமீதா வருத்தப்பட வேண்டாம்; அவர் வருத்தப்படுவதாக இருந்தால், எங்கள் வருத்தத்தையும் பதிவு செய்து கொள்கிறோம்.டவுட் தனபாலு: 'வருத்தத்துக்குவருத்தம் சரியா போச்சு'ன்னு சொல்றீங்களா... அது சரி... நடிகை நமீதாவை பார்த்ததும்,'ஆ'ன்னு வாயை பிளந்துட்டு, 'நீங்க போங்க மேடம்'னு சொல்லாம, 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற திருவிளையாடல் நடந்தமதுரையில், அதே கடமை உணர்ச்சியுடன் கேள்வி எழுப்பிய ஊழியர்களை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்: மத்திய அரசில் நேரடி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக முதல்வர், 'நேரடி நியமனம் என்பது, சமூக நீதியின் மீது தொடுக்கும்தாக்குதல்' என, கூறினார். ஆனால், 'தி.மு.க., அரசு, 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராக, பல துறைகளிலும் ஆலோசகர்களை நேரடி நியமனம்செய்கிறது' என்று தலைமைச்செயலக சங்கம் குற்றம்சாட்டுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.டவுட் தனபாலு: 'மாமியார் உடைத்தால் மண் சட்டி; மருமகள்உடைத்தால் பொன் சட்டி' என்ற பழமொழிக்கு சிறந்த உதாரணம்,தி.மு.க., அரசு தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக முதல்வர் ஸ்டாலின்:'முதல்வர் வெளிநாடு சென்றிருந்தாலும், தமிழகத்தில்எந்தவொரு பணியும் தடைபடாமல் நடக்கிறது' என, மக்கள் தரும் சான்றிதழே திராவிட மாடல் அரசுக்கு பெருமை சேர்க்கும். அந்த சான்றிதழை அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் பெற்று தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான் பொறுப்பை உங்களிடம் பகிர்ந்து செல்கிறேன். கட்டுப்பாடு காக்கும் வகையில், செயலில் வேகம்,- சொற்களில் கவனம் என்பதை மனதில் நிறுத்தி செயலாற்றுங்கள்.டவுட் தனபாலு: 'நாம இங்க இருக்கிறப்பவே, ஏடாகூடமாபேசி, 'ஏழரை'யை இழுப்பாங்களே...இல்லாதப்ப, என்னவெல்லாம் பண்ணுவாங்களோ' என்ற முதல்வரின் கவலை, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
அமைச்சருக்கு 'நெஞ்சில் உத்திரம் கொட்டுகிறது ' வருத்தம் வருத்தத்துக்காக வருத்தம் என்னமா உருகுகிறார்
அது சரி உண்மையான இந்துக்களை கேள்வி கேட்கும் அறிவாளிகள் மதத மதத்துகாரங்களை கேட்காதீங்க சரியா?