உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

வி.சி., கட்சியின் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா:கடந்த 2021 சட்டசபை தேர்தலில்,தி.மு.க.,வுக்கு இருந்தது போன்றவலுவான கூட்டணியை, அ.தி.மு.க.,வும் கட்டமைத்துஇருந்தால் முடிவுகளே கூட மாறி இருக்கலாம். வி.சி., போன்ற வலுவான கட்சிகளை கூட்டணியில் பெற்றிருந்ததாலேயே வெற்றி பெற முடிந்தது. இனி, ஆட்சியில் பங்கு கொடுப்பதாக ஒப்புக் கொண்டால் மட்டுமே, பெரிய கட்சிகள் ஆட்சிக்கு வர முடியும். அடுத்து தமிழகத்தில் யார் ஆட்சி அமைத்தாலும், அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். அதை நோக்கிய அரசியல் தான் நடக்கிறது. டவுட் தனபாலு: 'ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் தான் கூட்டணி' என அடம் பிடித்தால், ரெண்டு திராவிட கட்சிகளும் பேசி வச்சுக்கிட்டு, உங்களை ஓரம்கட்டிடும்... பிறகு, மக்கள் நல கூட்டணியை துாசு தட்டும் நிலை மறுபடியும் வந்துடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: உங்களுக்கு மகனாக பிறந்த ஒரே காரணத்துக்காக உதயநிதியை துணை முதல்வராக்கி அழகு பார்க்க நினைப்பதெல்லாம், ஸ்டாலினுக்கே கொஞ்சம் கூடுதலாகத் தெரியவில்லை? கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் ஓட்டு கேட்டு செல்லும் போதும், தேர்தல் அறிக்கையிலும் உதயநிதியை அமைச்சர் ஆக்குவோம் என்று எங்காவது சொல்லி இருந்தீர்களா? -டவுட் தனபாலு: உங்க கட்சிக்கான தேர்தல் அறிக்கையை,2011ல் ஜெ., வெளியிட்டப்ப, 'உதயகுமார் என்பவர் ஜெயித்தால்,அவரை அமைச்சர் ஆக்குவோம்'னுவாக்குறுதி தந்தாங்களா, என்ன...? உங்க உட்கட்சிபஞ்சாயத்துகளை தி.மு.க.,வும் பேச ஆரம்பித்தால், உங்களால பதில் தர முடியுமா என்பது, 'டவுட்'தான்!வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: கள்ளக்குறிச்சியில், அக்., 2ல் மதுவிலக்குமாநாடு நடத்துகிறோம். இது, மற்ற மாநாடுகளை போல, சாதாரண மாநாடு என்று நினைத்துவிட கூடாது. அனைத்து கட்சியினரும் மது வேண்டாம் என்பர். அதேசமயம் மதுவை ஒழிக்க விடாமல் பார்த்துக்கொள்ள, எல்லா முயற்சிகளையும் எடுப்பர். இந்தியா முழுதும் இதுதான் நிலை.டவுட் தனபாலு: அதான், நாடு முழுக்க இருக்கிற சூழலை தெளிவா சொல்லிட்டீங்களே... ஒட்டுமொத்த நாட்டையும், நீங்க நடத்தும் ஒரு நாள் மாநாட்டுல திருத்திட முடியும்னு நினைக்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
செப் 24, 2024 18:52

இவர்களால் கிடைக்கப்போகும் சில ஆயிரம் ஓட்டுக்கள்தான் வெற்றியை நிர்ணயிக்கப் போகிறதாம் தங்கத்தட்டில் அமைச்சர் பதவியுடன் வலம் வரலாம் என்று கனவுடன் அலைந்தால் இரு கட்சிகளுக்கும் வேண்டாதவராக ஆகிவிடுவார் இந்த விஷயத்தில் இரு கட்சிகளுமே ஒற்றுமை, உஷார்


Rajan
செப் 24, 2024 05:53

தமிழ்நாட்டை பற்றி கவலைப்படாமல் நாட்டின் நிலை, கட்சிகளின் நிலை என்று வேறு கிளைகளுக்கு தாவ பார்க்கிறார். ஸைலண்டாக விழுந்த அடியோ


முக்கிய வீடியோ